Homeசெய்திகள்சினிமாஅருண் விஜயின் 'ரெட்ட தல'.... கோவாவில் நடைபெறும் இறுதி கட்ட படப்பிடிப்பு!

அருண் விஜயின் ‘ரெட்ட தல’…. கோவாவில் நடைபெறும் இறுதி கட்ட படப்பிடிப்பு!

-

- Advertisement -

இறுதி கட்ட படப்பிடிப்பில் அருண் விஜயின் ரெட்ட தல!

அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ரெட்ட தல படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.அருண் விஜயின் 'ரெட்ட தல'.... கோவாவில் நடைபெறும் இறுதி கட்ட படப்பிடிப்பு!

நடிகர் அருண் விஜய் வித்தியாசமான கதையாம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். இவருடைய தடையற தாக்க, தடம் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தது கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் மிஷன் சாப்டர் 1 எனும் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதே சமயம் அருண் விஜய் பாலாவின் வணங்கான் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். அடுத்ததாக அருண் விஜய் நடிப்பில் ரெட்ட தல எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே இவர் தடம் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரெட்ட தல திரைப்படத்தினை க்ரிஷ் திருக்குமரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதனை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம் சி எஸ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்ட நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் பட குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற இருப்பதாக படக்குழுவினர் சில புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ