நடிகர் அருண் விஜய் கடைசியாக மிஷன் சாப்டர் 1 எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது அருண் விஜய், ரெட்ட தல எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதற்கிடையில் இவர் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஸ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இப்படத்திலிருந்து டீசரும், ட்ரைலரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்தது வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படமானது 2025 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது 2025 ஜனவரி 10ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே அதே தேதியில் கேம் சேஞ்சர் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடாமுயற்சி திரைப்படமும் அதே தேதியில் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.