Homeசெய்திகள்சினிமாகொம்பன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் அருள்நிதி!

கொம்பன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் அருள்நிதி!

-

இயக்குனர் முத்தையா தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களங்களில் படங்களை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். கொம்பன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் அருள்நிதி!அந்த வகையில் இவர் குட்டிப்புலி, கொம்பன், விருமன், மருது, தேவராட்டம் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக முத்தையா இயக்கத்தில் வெளியான காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. எனவே அடுத்ததாக தனது மகன் விஜய் முத்தையாவை வைத்து சுள்ளான் சேது எனும் திரைப்படத்தை இயக்கினார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக் ஆகியோரின் கூட்டணியில் புதிய படம் ஒன்றை முத்தையா இயக்கப் போகிறார் என்று புதிய தகவல்கள் வெளிவந்தன. இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் முத்தையா நடிகர் அருள்நிதியை இயக்கப் போவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.கொம்பன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் அருள்நிதி!

அருள்நிதி, கழுவேத்தி மூர்க்கன் படத்திற்குப் பிறகு டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அருள்நிதி முத்தையாவுடன் கைகோர்க்க இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் கிராமத்து கதைக்களத்தில் உருவாக இருக்கும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. அதேசமயம் முத்தையா முதலில் எந்த படத்தை இயக்கப் போகிறார் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ