அருள் நிதியின் டிமான்ட்டி காலனி 2 படத்தின் ஃபர்ஸ்ட் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி மற்றும் அஜய் ஞானமுத்து கூட்டணியில் டிமான்ட்டி காலனி திரைப்படம் வெளியானது. ஹாரர் கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு 7 வருடங்கள் கழித்து டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தையும் அஜய் ஞானமுத்து இயக்க அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் வி ஜெ அர்ச்சனா, முத்துக்குமார், அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட் என்டர்டைன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. டிமான்ட்டி காலனி 2 என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் புனிதமற்ற ஆத்மாக்களின் கதையாகும்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததை தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். மேலும் விரல வைக்கும் ஒரு மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்தனர்.
இந்நிலையில் டிமான்ட்டி காலனி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மாலை 5.01 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.