Homeசெய்திகள்சினிமாஅருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2.... எதிர்பார்ப்புகளை எகிற செய்யும் ட்ரெய்லர் வெளியீடு!

அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2…. எதிர்பார்ப்புகளை எகிற செய்யும் ட்ரெய்லர் வெளியீடு!

-

அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2.... எதிர்பார்ப்புகளை எகிற செய்யும் ட்ரெய்லர் வெளியீடு!அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டிமான்ட்டி காலனி 2 படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015-ல் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. முழுக்க முழுக்க ஹாரர் திரில்லர் படமாக இப்படம் வெளியாகி இருந்தது. அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த் அபிஷேக் ஜோசப் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜய் ஞானமுத்து டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.

டிமான்ட்டி காலனி 2 VENGEANCE OF THE UNHOLY என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், VJ அர்ச்சனா, அருண் பாண்டியன் முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் சாம் சி எஸ் இதற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லர் முதல் பாகத்தின் முடிவிலிருந்து காட்டப்படுகிறது. மிரட்டலான பின்னணி இசையுடன் பயமுறுத்தும் காட்சிகள் நிறைந்த இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற செய்துள்ளது. மேலும் இந்த ட்ரெய்லரில் விரைவில் இப்படம் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ