Homeசெய்திகள்சினிமாஆர்யா, கௌதம் கார்த்திக் நடிக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் ரிலீஸ் எப்போது?

ஆர்யா, கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் ரிலீஸ் எப்போது?

-

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.ஆர்யா, கௌதம் கார்த்திக் நடிக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் ரிலீஸ் எப்போது?

நடிகர் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் கூட்டணியில் மிஸ்டர் எக்ஸ் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தினை விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப் ஐ ஆர் படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியிருக்கிறார். இதில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து மஞ்சு வாரியர், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திபு நினன் தாமஸ் இதற்கு இசையமைக்கிறார். தன்வீர் மிர் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க ஜிகே பிரசன்னா இதன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். ஆர்யா, கௌதம் கார்த்திக் நடிக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் ரிலீஸ் எப்போது?கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படமானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மிஸ்டர் எக்ஸ் படத்தின் டீசர், ட்ரைலர் போன்ற அப்டேட்டுகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ