Homeசெய்திகள்சினிமாஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஆர்யா - கௌதம் கார்த்திக் காம்போவின் 'மிஸ்டர் எக்ஸ்'!

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஆர்யா – கௌதம் கார்த்திக் காம்போவின் ‘மிஸ்டர் எக்ஸ்’!

-

மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஆர்யா - கௌதம் கார்த்திக் காம்போவின் 'மிஸ்டர் எக்ஸ்'!

நடிகர் ஆர்யா, கௌதம் கார்த்திக் ஆகிய இருவரும் இணைந்து மிஸ்டர் எக்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து மஞ்சு வாரியர், சரத்குமார் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை FIR பட இயக்குனர் மனு ஆனந்த் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. திபு நினன் தாமஸ் படத்திற்கு இசையமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைகளை இந்த படம் உருவாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் மிகுந்த பொருள் செலவில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. கடந்த ஆண்டிலேயே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா தீவிரமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஏற்கனவே சமூக வலைதளங்களை வைரலாகி வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. எனவே படம் சம்பந்தமான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஆர்யா - கௌதம் கார்த்திக் காம்போவின் 'மிஸ்டர் எக்ஸ்'!

நடிகர் ஆர்யா இதை தொடர்ந்து சார்பட்டா 2 படத்தில் நடிக்க உள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ