நடிகர் ஆர்யா, தெலுங்கு நடிகர் வெங்கடேஷுடன் இணைந்து நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகரான வெங்கடேஷ் தற்போது ‘சைந்தவ்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தெலுங்கில் பல வெற்றி படங்களை இயக்கிய சைலேஷ் கொல்லனு இயக்குகிறார். இதில் வெங்கடேஷுடன் இணைந்து நவாசுதீன் சித்திக், ஆன்ட்ரியா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
நிகாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சைந்தவ் திரைப்படத்தில் நடிகர் ஆர்யா இணைந்துள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் நடிகர் ஆர்யா கையில் துப்பாக்கியுடன் வித்யாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
இதற்கிடையில் ஆர்யா தமிழில் ‘எக்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.