நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அதன் பின்னர் போர்தொழில், சபாநாயகன், ப்ளூ ஸ்டார் என தொடர் வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அடுத்ததாக அசோக்செல்வன் நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தொடர்ந்து பிசியாக பல படங்களில் நடித்து வரும் அசோக் செல்வன் தன்னுடைய தாய் தந்தைக்கு விலை உயர்ந்த சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது டொயோட்டா ஹைகிராஸ் ஹைபிரிட் காரை கிப்ட் செய்துள்ளார் அசோக் செல்வன். இது அவரது பெற்றோரின் நீண்ட நாள் ஆசையாம். அதனை தற்போது அசோக் செல்வன் நிறைவேற்றியுள்ளார். அதேசமயம் அந்தக் காரில் 1986 ஆம் ஆண்டு குறிக்கும் விதத்தில் நம்பர் பிளேட்டையும் வாங்கி கொடுத்திருக்கிறார். இந்த ஆண்டு அசோக் செல்வன் பெற்றோரின் திருமண ஆண்டை குறிப்பதாக இருக்கக்கூடும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.