சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் கூட்டணியில் உருவான திரைப்படம் போர் தொழில். இதில் இவர்களுடன் இணைந்து சரத் பாபு மற்றும் நிகிலா விமல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். அப்பிளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. க்ரைம் திரில்லர் கதை களத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இது ராட்சசன் படத்திற்கு பிறகு மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படம் ஆகும். பல்வேறு தரப்பினர் இடையே படம் பாராட்டுகளையும் பெற்றது.
இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அசோக் செல்வன், “போர் தொழில் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும். அதற்கான கதையைக் கொண்டு செல்லும் பல்வேறு வழிகள் முதல் பாகத்தில் இருக்கிறது. இது சம்பந்தமாக இயக்குனர் விக்னேஷ் ராஜா முடிவு செய்வார்” என்று கூறியுள்ளார்.