Homeசெய்திகள்சினிமாகோலாகலமாக நடைபெற்றது அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் திருமணம்!

கோலாகலமாக நடைபெற்றது அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் திருமணம்!

-

- Advertisement -

பிரபல நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் சமீப காலமாக செய்திகள் பரவி வந்தது.  அதன்படி அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியனின் திருமணம் இன்று (செப்டம்பர் 13) கோலாகலமாக நடைபெற்றது. இத்திருமண விழா நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் இட்டேரி எனும் ஊரில் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து பா ரஞ்சித் தயாரிக்கும் ப்ளூ ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ