Homeசெய்திகள்சினிமாஅசோக் செல்வனின் 'சபாநாயகன்'..... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அசோக் செல்வனின் ‘சபாநாயகன்’….. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

அசோக் செல்வனின் 'சபாநாயகன்'..... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!நடிகர் அசோக் செல்வன் சமீபத்தில் நடித்திருந்த படம் போர் தொழில். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அடுத்ததாக அசோக் செல்வன் நடிப்பில் ப்ளூ ஸ்டார் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இதற்கிடையில் அசோக் செல்வன் நடிப்பில் சபாநாயகன் திரைப்படம் வெளியானது. கடந்த டிசம்பர் 22ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. நல்ல வரவேற்பை பெற்று அதிக வசூலை பெற்று தரும் சபாநாயகன் படத்திற்காக கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அசோக் செல்வனின் 'சபாநாயகன்'..... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சி எஸ் கார்த்திகேயன் எழுதி, இயக்கிய இந்த படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து மேகா ஆகாஷ், சாந்தினி சௌத்ரி ,மைக்கேல் தங்கதுரை, அருண்குமார், கார்த்திகா முரளிதரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிளியர் வாட்டர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். தினேஷ் புருசோத்தமன், பிரபு ராகவ், பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ