நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர். தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அசோக் செல்வன் , போர் தொழில் என்ற க்ரைம் திரில்லர் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து அசோக்செல்வன் நடிப்பில் வெளியான சபாநாயகன் திரைப்படமும் ரசிகர்களின் பேராதரவை பெற்றது. இந்நிலையில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி அசோக் செல்வன், சாந்தனு கூட்டணியில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போடுகிறது.
தற்போது அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி பொன் ஒன்று கண்டேன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் அசோக் செல்வன். இந்த படத்தை வி.பிரியா இயக்குகிறார். இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நடிகர் வசந்த் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முக்கோண காதல் கதையை மையமாக வைத்து உருவாகிறது. அதே சமயம் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஷ்ணு விஷால், தமன்னா கூட்டணியில் உருவாக இருந்த படம் தான் பொன் ஒன்று கண்டேன். இப்படம் கைவிடப்பட்டதால் அசோக் செல்வனின் புதிய படத்திற்கு இதன் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.