நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், ஓ மை கடவுளே, தெகிடி போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் பெரும்பாலும் நல்ல கதையம்சம் கொண்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். அந்த வகையில் அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் போர் தொழில் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் சரத்குமார் அசோக்செல்வனும் மிரட்டி இருந்தனர்.
அதைத்தொடர்ந்து அசோக் செல்வன் சி. எஸ். கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ள சபாநாயகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அசோக்செல்வனுடன் இணைந்து மேகா ஆகாஷ், சாந்தினி சௌத்ரி, கார்த்திகா முரளிதரன், மைக்கேல் தங்கதுரை, அருண்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். கிளியர் வாட்டர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படம் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று 2வது வாரமாக திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது. குறைவான திரையரங்குகளில் திரையிடப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதனால் தற்போது கூடுதலாக 50 திரைகள் சபாநாயகன் படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் தமிழ் ரசிகர்களிடையே பிரபாஸின் சலார் திரைப்படம் எதிர்பார்த்த அளவில் கவனம் பெறவில்லை. எனவே இனிவரும் நாட்களிலும் சபாநாயகன் திரைப்படம் வசூலை வாரி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அதே டிசம்பர் 22-ல் வெளியான விதார்த்தத்தின் ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.