Homeசெய்திகள்சினிமாபிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்..... அஸ்வத் மாரிமுத்து!

பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்….. அஸ்வத் மாரிமுத்து!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோரின் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து.பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்..... அஸ்வத் மாரிமுத்து! வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று அஸ்வத் மாரிமுத்துவிற்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். கடந்த பிப்ரவரி 21 இல் வெளியான இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இதன் பின்னர் அஸ்வத் மாரிமுத்து, சிம்பு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கு கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்..... அஸ்வத் மாரிமுத்து!இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசி உள்ளார் அஸ்வத் மாரிமுத்து. அதன்படி அவர் பேசியதாவது, “பிரதீப் என்னிடம் ஓ மை கடவுளே படம் எடுப்பதற்கு முன்பாகவே நம்ம ரெண்டு பேரும் ஒரு படம் பண்ணுவோம் என்று கேட்டார். இருவருமே 10 வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம். ஆனால் நான், இரண்டு பேருமே சினிமாவில் வளர்வோம். ஒரு இடத்தில் இருவரும் கரெக்டாக சந்திப்போம். அப்போதுதான் இருவரும் இணைந்து படம் பண்ண முடியும் என்று சொன்னேன். அதேபோல் பிரதீப் ரங்கநாதனும் லவ் டுடே படத்தில் நடித்து அவருடைய மார்க்கெட்டை ஏற்றுக்கொண்டார்.

நானும் ‘ஓ மை கடவுளே’ படத்தை முடித்துவிட்டு வந்ததனால் தான் ‘டிராகன்’ படம் வெற்றி அடைந்துள்ளது. ரூ. 37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இப்பொழுது ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. எல்லா அன்பும் இந்த படத்திற்கு கிடைக்க ஒரே காரண மக்கள்தான். ஒரு விஷயத்தை ஏன் பண்ண போகிறோம் என்ற முடிவு சரியாக இருந்தால் அது வெற்றி தான். பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். அதேபோல் அசோக் செல்வனுக்கும் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. அதனால்தான் இந்த இரண்டு படங்களும் வெற்றி அடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ