Homeசெய்திகள்சினிமா'தளபதி 69' படத்தில் இணைந்த அசுரன் பட நடிகர்!

‘தளபதி 69’ படத்தில் இணைந்த அசுரன் பட நடிகர்!

-

- Advertisement -
kadalkanni

அசுரன் பட நடிகர் தளபதி 69 படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய் கடைசியாக கோட் படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். 'தளபதி 69' படத்தில் இணைந்த அசுரன் பட நடிகர்!இந்த படத்தை கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹெச். வினோத் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படமானது இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் அசுரன் பட நடிகர் டீஜய் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து நடிகரும் பாடகருமான டீஜய் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார். 'தளபதி 69' படத்தில் இணைந்த அசுரன் பட நடிகர்!அதன்படி அவர் கூறியதாவது, “தளபதி 69 படத்தில் நான் மமிதா பைஜுக்கு ஜோடியாக நடிக்கிறேன். எனக்கு இந்த படத்தில் நடித்த வாய்ப்பு கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது. இது தளபதி விஜயின் கடைசி படம். வேண்டாம் என்று யார் சொல்வார்? சிறுவயதிலிருந்தே விஜயின் எல்லா படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன். ஒரு நடிகராக அவரை பிடிக்கும் என்று சொல்வதை விட ஒரு மனிதனாகவும் அவரை எனக்கு பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ