Homeசெய்திகள்சினிமாஅட்லீ, அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்.... கதாநாயகி யார் தெரியுமா?

அட்லீ, அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்…. கதாநாயகி யார் தெரியுமா?

-

- Advertisement -

அட்லீ இயக்கும் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.அட்லீ, அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்.... கதாநாயகி யார் தெரியுமா?

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். அதே சமயம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தையும் இயக்கி பிரம்மாண்ட வெற்றி கண்டார். எனவே இதைத்தொடர்ந்து அட்லீ என்ன படம் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி அட்லீ, சல்மான் கான் – கமல்ஹாசன் ஆகியோரின் கூட்டணியில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் அதன் பிறகு அட்லீ, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் இந்த படமானது ரூ. 500 கோடி பட்ஜெட்டில் உருவாகப் போவதாகவும் தொடர்ந்து பல தகவல்கள் சமூக வலை தளங்களில் தீயாய் பரவி வருகின்றனர்.அட்லீ, அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்.... கதாநாயகி யார் தெரியுமா? அதேசமயம் இந்த படத்தில் சாய் அபியங்கர் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. தற்போது இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவலும் வெளியாகி உள்ளன. அதன்படி இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கப் போவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ