Homeசெய்திகள்சினிமாகோலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக மாறிய அட்லீ?

கோலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக மாறிய அட்லீ?

-

- Advertisement -

அட்லீ, 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். கோலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக மாறிய அட்லீ?இவரை முதல் படமே இவருக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து விஜய் அதைத்தொடர்ந்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை இயக்கினார். அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாகி ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டிற்கு சென்ற இயக்குனர்களில் தனது முதல் படத்திலேயே வரலாற்று சாதனை படைத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அட்லீ. அடுத்ததாக அட்லீ, அல்லு அர்ஜுனை இயக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தது. அதன்படி இந்த புதிய படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கோலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக மாறிய அட்லீ?இந்நிலையில் அட்லீ, இந்த படத்திற்காக ரூ. 60 கோடி வரை சம்பளம் கேட்டிருக்கிறாராம். 20 வருடங்களுக்கு மேலாக திரைத் துறையில் இயக்குனராக பணியாற்றி வரும் வேறு எந்த இயக்குனர்களும் இத்தனை கோடி சம்பளம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே கோலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக மாறி உள்ளார் அட்லீ. இவர் ஒரு தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் அதன்படி தெறி படத்தின் இந்தி ரீமேக் படமான பேபி ஜான் படத்தையும் அட்லீ தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ