Homeசெய்திகள்சினிமாஇயக்குநர் அட்லீக்காக காத்திருக்கும் பாலிவுட் நடிகர்கள்... வீடியோ வைரல்...

இயக்குநர் அட்லீக்காக காத்திருக்கும் பாலிவுட் நடிகர்கள்… வீடியோ வைரல்…

-

- Advertisement -
கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் வரை சென்று இன்று வெற்றி இயக்குநராக வலம் வருபவர் அட்லீ. தமிழில் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றி, அடுத்து ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த அட்லீக்கு அடுத்து ஏறுமுகம் தான். விஜய்யுடன் அடுத்தடுத்து பல படங்களில்ல கமிட்டாகினார். இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் கூட்டணி அமைத்து தெறிபடத்தை இயக்கினார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து பிகில் திரைப்படம் மற்றும் மெர்சல் திரைப்படங்களை இயக்கினார். இதில் மெர்சல் திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தமிழில் இருந்து பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ முதல் படத்தையே, இந்தி திரையுலகின் ஜாம்பவான் ஷாருக்கானை வைத்து இயக்கினார். கடந்த ஆண்டு வெளியான ஜவான் திரைப்படம் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து, பாலிவுட்டின் டாப் இயக்குநராக அட்லீயை முன்னிறுத்தியது. இத்திரைப்படத்தை தொடர்ந்து பாலிவுட்டிலும் அடுத்தடுத்து படம் இயக்க திட்டமிட்டிருக்கிறார் அட்லீ. இதனிடையே, பட தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தெறி படத்தின் இந்தி ரீமேக்கை தற்போது தயாரித்து வருகிறார். ஜான் பேபி என்று இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சியில் அட்லீ தனது குழந்தை மற்றும் மனைவி பிரியாவுடன் கலந்து கொண்டார். அப்போது, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் அர்ஜூன் கபூர் ஆகியோர் அட்லீயுடன் இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், அட்லீயை கேட்ச் பிடிக்க பாலிவுட் நடிகர்கள் அனைவரும் ஸ்லிப்பில் நின்று கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளனர். அட்லீயின் அடுத்த படமும் இந்தியில் இருக்குமா என்ற ஆவல் எழுந்துள்ளது.

MUST READ