நடிகர் ஷாருக்கானுக்கு இயக்குநர் அட்லீ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2023-ம் ஆண்டில் ஒரே நடிகரின் இரண்டு திரைப்படங்கள் தலா ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது என்றால், அது ஷாருக்கானின் படங்கள் தான். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஷாருக்கான் பாலிவுட்டின் கிங் காங் என்று அழைக்கப்படுபவர். பாலிவுட் பாஷா என்றும் கிங் ஆஃப் ரொமான்ஸ் என்றும் ரசிகர்களால் குறிப்பாக ரசிகைகளால் கொண்டாடப்படும் ஷாருக்கானுக்கு இன்று பிறந்தநாள்.
‘தில் ஆஷ்னா ஹை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஷாருக்கானின் திரைப்பயணம் 32 ஆண்டுகளாகியும் இன்றுவரை அவரை முன்னிலையில் வைத்துள்ளது. 90 களில் பெரும்பாலான படங்களில் ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்த அவரை ரசிகைகள் தங்களது காதலனாகவே கொண்டாடினார்கள். ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்தாலும் அவர் வெளிப்படுத்திய உடல் மொழி, முகபாவனைகள் ரசிகர்களை கட்டிப்போட்டன. தனக்குத் தெரிந்ததை திரைமொழியாக்கி வசூலில் சாதனை படைப்பதில், அதிக கவனம் செலுத்திய ஷாருக்கான் பாலிவுட்டின் தவிர்க்க முடியாக ஹீரோவாக மாறினார்.
அவரது நடிப்பில் நடப்பு ஆண்டில் வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்று ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தன. இந்நிலையில், 58 வது வயதில் அடியெடுத்து வைக்கும் ஷாருக்கானுக்கு, இயக்குநர் அட்லீ வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.