இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து கலக்கிய இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட் பக்கம் சென்று ஷாருக் கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தினை ஷாருக் கானின் மனைவி கௌரி தயாரிக்கிறார் மற்றும் அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் அட்லீயின் அடுத்த படத்தில் பான் இந்தியா ஹீரோக்களான அல்லு அர்ஜுன் அல்லது யஷ் இவர்களில் யாரேனும் ஒருவர் நடிப்பர் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.