Homeசெய்திகள்சினிமா'விடுதலை 2' படத்தில் நடிக்கும் அட்டகத்தி தினேஷ்..... வெளியான புதிய தகவல்!

‘விடுதலை 2’ படத்தில் நடிக்கும் அட்டகத்தி தினேஷ்….. வெளியான புதிய தகவல்!

-

சில மாதங்களுக்கு முன்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் வெளியானது. சூரி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் சிறுமலை பகுதியில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்புகள் சிறுமலை பகுதியில் பெய்து வரும் கன மழையால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அட்டகத்தி தினேஷ் விடுதலை 2 திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்தில் மஞ்சு வாரியரும் விசாரணை திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ