பிரபல ஹாலிவுட் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன், கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘டைட்டானிக்’ என்ற திரைப்படத்தின் மூலம் உலகளவில் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கடந்த 2009 ஆம் ஆண்டு ‘அவதார்’ எனும் திரைப்படத்தை அறிவியல் புனை கதையில் 1000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கியிருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பட்டிதொட்டி வரையிலும் பரவலாக பேசப்பட்டது. இப்படம் அமெரிக்க டாலரில் ஏறத்தாழ 3 பில்லியன் அளவிற்கு வசூல் செய்து சாதனை படைத்தது.
நிஜ வாழ்க்கையில் இருந்து பாண்டரா உலகத்திற்கு ரசிகர்களையும் சேர்த்தே அழைத்துச் சென்றார்.
இதை அடுத்து ஜேம்ஸ் கேமரூன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் பல புதிய டெக்னலாஜிக்களை உபயோகித்து பிரம்மாண்டமான ‘அவதார் 2‘ திரைப்படத்தை உருவாக்கினார். இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகி , 2.3 பில்லியன் டாலர் வசூலை வாரிக்குவித்தது.
இதைத்தொடர்ந்து அவதார் படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருக்கிறார். மேலும் அவதார் 2 படம் திரையில் வெளியாகி 175 நாட்களுக்குப் பிறகு தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.