பொங்கல் ஸ்பெஷலாக வெளியான அயலான் படம் குழந்தைகள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் இதுவரை 75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இன்று நேற்று நாளை படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இப்படத்தை இயக்கி இருந்தார். சிவகார்த்திகேயன், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்திருந்தனர். படத்தில் வரும் ஏலியனுக்கு சித்தார்த் வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர்.இந்நிலையில் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராஜேஷுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் இவருக்கு தொடர் சிகிச்சை அளித்து உடல் நிலையைக் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு என்ன பிரச்சனை என்பதை இன்னும் மருத்துவர்கள் அறிவிக்கவில்லை. அவருடைய உடல்நிலை குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என நம்பப்படுகிறது.
கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ராஜேஷ் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் ஏற்படும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.