Homeசெய்திகள்சினிமாதீபாவளி ரேஸில் இருந்து விலகுகிறதா அயலான்!?

தீபாவளி ரேஸில் இருந்து விலகுகிறதா அயலான்!?

-

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் அயலான். கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஒரு சில காரணங்களால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் இருக்கிறது. இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, இஷா கோபிகர் கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனமும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படம் சயின்ஸ் பிக்சன் கதை களத்தில் ஒரு ஏலியனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் அயலான் திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளில் தாமதம் ஏற்படுவதால் இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ