சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திரைப்படம் அயலான். 24 ஏ எம் நிறுவனமும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், இஷா கோபிகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏலியன் ஒன்றை மையமாக வைத்து சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
#Ayalaan 2nd single🎶 in a few days✨
Get ready for a grand Pongal release 👽🛸
— KJR Studios (@kjr_studios) December 17, 2023
அயலான் படத்தின் டீசர், ட்ரெய்லர், முதல் பாடல் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது. வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் வெளியான சில தகவலின் மூலம் ரசிகர்களிடையே இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அதனை உறுதிப்படுத்தும் விதமாக கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் ‘பிரம்மாண்ட ரிலீசுக்கு தயாராகுங்கள்’ என்று சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது.
இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மேலும் ஒரு புதிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி அயலான் படத்தின் அயலா அயலா எனும் இரண்டாவது பாடல் வெளியாக இருப்பதாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.