Homeசெய்திகள்சினிமாஅயலான் படத்திற்கான தடை நீக்கம்... உயர்நீதிமன்றம் உத்தரவு....

அயலான் படத்திற்கான தடை நீக்கம்… உயர்நீதிமன்றம் உத்தரவு….

-

அயலான் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். காதல், கமர்ஷியல் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும்படியாக திரைப்படங்களை தேர்வு செய்து சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். இப்படத்தை நேற்று இன்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கி இருக்கிறார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். யோகிபாபு, கருணாகரன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக முடிவு அடைந்தது. இருப்பினும் படத்திற்கு ஏற்பட்ட பல சிக்கல்களால் அயலான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், கடன் பிரச்சனை காரணமாக படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்த ஹாலிவுட் படத்தின் காப்பி தான் அயலான் படமா?.... சொல்லவே இல்ல!

இந்நிலையில், அயலான் திரைப்படம் வெளியாக விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒப்பந்தப்படி 1 கோடி ரூபாய் தராமல் வெளியிடக்கூடாது என விளம்பர நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், 50 லட்சம் ரூபாய் பணம் திரும்ப செலுத்திய நிலையில், மீதமுள்ள பணத்தை ஏப்ரலுக்குள் செலுத்த உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் தடை விலக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை அயலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதை படக்குழு உறுதி செய்துள்ளது.

MUST READ