அயலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் 14 வது படமாக வெளியானது அயலான் திரைப்படம். இந்த படத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை பட இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ராஜேஷ் தயாரித்திருந்தார். ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருந்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். படத்தில் வில்லனாக சரத் கேல்கரும் வில்லியாக இஷா கோபிகரும் நடித்திருந்தனர். மேலும் இவர்களுடன் இணைந்து கருணாகரன், யோகி பாபு, பால சரவணன், பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏலியன் சம்பந்தமான கதைக்களத்தில் சயின்ஸ் பிக்சன் – பேண்டஸி படமாக உருவாகி இருந்த அயலான் திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. இப்படம் சிவகார்த்திகேயனின் மற்ற படங்களைப் போலவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் அமைத்திருந்தது. அதன்படி தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது அயலான். இந்நிலையில் அயலான் படமானது வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி சன் நெக்ஸ்ட்டில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.