கடந்த ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் அயோத்தி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கியிருந்தார். இந்த படத்தில் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ராணி , குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வட மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திற்கு யாத்திரை செல்ல திட்டமிட்டு வருகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து நேரிடுகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதை மிகவும் எமோஷனலாக காட்டியிருந்தார் இயக்குனர் மந்திரமூர்த்தி. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது இயக்குனர் மந்திரமூர்த்தி அடுத்த படம் என்னவென்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் மந்திரமூர்த்தி மீண்டும் சசிகுமார் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக அப்டேட் கிடைத்துள்ளது. இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கிட்டத்தட்ட உறுதியான தகவல் வெளியாகி வருகின்றன. மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.