பேபி & பேபி படத்தின் டீசர் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.
சத்யராஜ், ஜெய், யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் தான் பேபி & பேபி. மேலும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, கீர்த்தனா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை பிரதாப் எழுதி இயக்கியிருக்கிறார். டிபி சாரதி இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க டி இமான் இதற்கு இசையமைக்கிறார். யுவராஜ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்த டீசரில் ஒரு குழந்தை ஒன்று காட்டப்படுகிறது. அந்த குழந்தை யாருடைய குழந்தை என்று யாருக்குமே தெரியவில்லை. இறுதியில் அந்த குழந்தை யாருடைய குழந்தை என்பதை கண்டறிவது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் போல் தெரிகிறது.
ஏற்கனவே சினிமாவில் குழந்தைகளை மையமாக வைத்து வெளிவந்த கதைகள் பெரும்பாலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நிலையில் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் இன்றைய எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சத்யராஜ் மற்றும் ஜெய் ஆகியோர் இணைந்து ஏற்கனவே ராஜா ராணி மற்றும் அன்னபூரணி ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.