பிரபல நடிகை அமலா பால், கடந்த 2010ல் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தின் மூலம் ரசிகர்களால் அறியப்படுபவர். அதைத்தொடர்ந்து தனுஷின் வேலையில்லா பட்டதாரி, விஜய்யின் தலைவா, விஷ்ணு விஷாலின் ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதன்படி இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் கடந்த 2014இல் இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு இயக்குனர் விஜயிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டார். அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் கவர்ச்சியாகவும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்த நடித்து வந்தார். அதேசமயம் கடந்த ஆண்டில் தன்னுடைய பிறந்தநாள் அன்று ஜெகத் தேசாய் என்பவரை காதலிப்பதாக அறிவித்தார். பின்னர் அமலாபால் – ஜெகத் தேசாய் இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் திருமணம் முடிந்த நிலையில் இரண்டு மாதங்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்தார் அமலா பால். இந்நிலையில் நடிகை அமலா பாலுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடந்துள்ளது. கேரளாவில் நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் இன்பம் பொங்க நடந்த வளைகாப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு ரசிகர்கள் அமலாபாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை அமலாபால், கடந்த மார்ச் 28ஆம் தேதி பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.