வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிரபல இயக்குனர் பாலா தற்போது வணங்கான் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முன்னதாக நடிகர் சூர்யா நடிக்க இருந்த நிலையில் சில காரணங்களால் இதில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். சூர்யா வெளியேறியதால் பின்பு 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படம் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து சமுத்திரக்கனி, மிஸ்கின், ரோஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகின்ற செப்டம்பர் 25ஆம் தேதி (நாளை) காலை 10 மணி அளவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.