Homeசெய்திகள்சினிமாதள்ளிப்போகும் பாலாவின் 'வணங்கான்' ரிலீஸ்!

தள்ளிப்போகும் பாலாவின் ‘வணங்கான்’ ரிலீஸ்!

-

இயக்குனர் பாலா தனித்துவமான படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தள்ளிப்போகும் பாலாவின் 'வணங்கான்' ரிலீஸ்!இவருடைய படங்களில் நடிக்கும் நடிகர்கள் பெரும்பாலும் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதையின் நாயகனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விடுவார்கள். அந்த அளவிற்கு எவ்வளவு பெரிய ஸ்டார் நடிகராக இருந்தாலும் அவர்களை மாறுபட்ட பரிமாணத்தில் காட்டுவார் பாலா. தற்போது பாலா அருண் விஜய் நடிப்பில் வணங்கான் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார். தள்ளிப்போகும் பாலாவின் 'வணங்கான்' ரிலீஸ்!ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அதைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் போன்றவை அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதே சமயம் சமீபத்தில் வணங்கான் திரைப்படம் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் வணங்கான் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று சொல்லப்படுகிறது. தள்ளிப்போகும் பாலாவின் 'வணங்கான்' ரிலீஸ்!அதாவது ஜூலையில் தனுஷின் ராயன் திரைப்படம் வெளியாக இருப்பதால் வணங்கான் திரைப்படமானது ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் என்று புதிய அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

MUST READ