ஆஸ்கார் 2023 விருதுகள்: 95வது அகாடமி விருதுகளில் சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்காக ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றது.
திரைப்படத் துறையில் கௌரவமாகக் கருதப்படும் 95வது அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகம் பேசப்பட்ட படமான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் ஆஸ்கார் விருதை வென்றது. சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவுக்கான விருதை ‘அவதார்’ திரைப்படம் வென்றுள்ளது.
‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’, ‘ஆல் க்யட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்ட்’, ‘தி பேட்மேன்’, ‘பிளாக் பாந்தர் வகாண்டா ஃபாரெவர்’, ‘டாப் கன்: மேவரிக்’ ஆகியவை 95வது அகாடமி விருதுகளில் சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்காக பரிந்துரைக்கப்பட்டன. அதில், ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் விருது பெற்றது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார்: தி வே ஆஃப் வாட்டர் டிசம்பர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 2009 இல் வெளியான அவதாருக்குப் பிறகு, அதன் தொடர்ச்சிக்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அவதார் இரண்டாம் பாகம் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் பல கோடிகளை வசூலித்துள்ளது.