Homeசெய்திகள்சினிமாகல்கி 2898 AD படத்திலிருந்து முதல் பாடல்... படக்குழுவின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்... கல்கி 2898 AD படத்திலிருந்து முதல் பாடல்… படக்குழுவின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்…
இன்று வெளியாக இருந்த கல்கி படத்தின் முதல் பாடல், நாளை ஒத்திவைக்கப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்
நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருக்கும் கல்கி 2898 AD திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருக்கிறார். இத்திரைப்படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். மேலும், படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஆக்ஷன், அதிரடி களத்தில் கல்கி 2898 AD திரைப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படம் வரும் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையொட்டி, படத்திற்கான புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்திற்காக வடிவமைக்கப்பட்ட புஜ்ஜி காரைக் கொண்டு புரமோசன் பணிகளை விறுவிறுப்பாக்கியது படக்குழு. இந்நிலையில், கல்கி 2898 AD திரைப்படத்திலிருந்து முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத காரணங்களால் பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்ததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், ஆடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.