பரத் நடிக்கும் காளிதாஸ் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பரத் தமிழ் சினிமாவில் பாய்ஸ், செல்லமே ஆகிய படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவர் காதல் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தன்னுடைய முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்றார். அதைத் தொடர்ந்து வெயில், கூடல் நகர், கண்டேன் காதலை என பல வெற்றி படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இருப்பினும் சமீப காலமாக பரத் நடிப்பில் வெளியாகும் சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்நிலையில் இவர் காளிதாஸ் 2 எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதாவது கடந்த 2019ல் பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் வெளியான காளிதாஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ செந்தில், பரத் கூட்டணியில் காளிதாஸ் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை எஸ்கே பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாம் சி எஸ் இதற்கு இசையமைக்கிறார். சுரேஷ் பாலா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் பரத்துடன் இணைந்து அஜய் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்தாண்டு ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (மார்ச் 8) வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.