இயக்குனர் இமயம் பாரதிராஜா தற்போது படம் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தனது மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள மார்கழி திங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல நடிகர் பாபு மறைவிற்கு பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் பாபு பாரதிராஜாவின் என் உயிர் தோழன் என்னும் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து பெரும்புள்ளி, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு, தாயம்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் பாபு படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி முதுகெலும்பு உடைந்த காரணத்தால் 30 வருடங்களுக்கு மேலாக படுத்த படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாபு இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இதற்கு திரை உலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
திரைத்துறையில்
மிகப்பெரும் நட்சத்திரமாக
வந்திருக்கவேண்டியவன்
படப்பிடிப்பில் நடந்த விபத்தில்
30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன்
வாழ்ந்து மறைந்த
” என் உயிர் தோழன் பாபு ” வின்
மறைவு மிகுந்த மனவேதனை
அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/ANwRUthJbd— Bharathiraja (@offBharathiraja) September 19, 2023
இந்நிலையில் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ” திரைத்துறையில் மிகப்பெரிய நட்சத்திரமாக வந்திருக்க வேண்டியவன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடங்களுக்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த “என் உயிர் தோழன் பாபு”வின் மறைவு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்” என்று உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.