Homeசெய்திகள்சினிமாதமிழில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் பாலிவுட் ஹாரர் த்ரில்லர்!

தமிழில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் பாலிவுட் ஹாரர் த்ரில்லர்!

-

இந்தியில் சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியில் கார்த்திக் ஆரியன், கியாரா அத்வானி, தபு உள்ளிட்டோரின் நடிப்பில் ‘பூல் புலையா -2‘ எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படம் ஒரு நகைச்சுவை திகில் திரைப்படமாகும்.

இப்படத்தை அனீஸ் பாஸ்மி இயக்கியிருந்தார். டி சீரிஸ் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது மற்றும் சந்திப் சிரோத்கர் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது இத்திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ளார்.

இது குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய ஞானவேல் ராஜா “பூல் புலையா-2 படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ளேன். இது மிகவும் சிறந்த கதை என்று நம்புகிறேன். மேலும் நடிகர்கள் மற்றும் இயக்குனர் யார் என்று முடிவாகவில்லை. நான் தற்போது பட குழுவினரை முடிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

MUST READ