Homeசெய்திகள்சினிமாகலைஞர் எழுதிய வசனத்தை அற்புதமாக பேசி நடித்த பிக்பாஸ் முத்துக்குமரன்!

கலைஞர் எழுதிய வசனத்தை அற்புதமாக பேசி நடித்த பிக்பாஸ் முத்துக்குமரன்!

-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கு அடையாளம் கடந்த 7 சீசன்களும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது தான். கலைஞர் எழுதிய வசனத்தை அற்புதமாக பேசி நடித்த பிக்பாஸ் முத்துக்குமரன்!முதல் 7 சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ரஞ்சித், ஜாக்லின், தர்ஷா குப்தா உள்ளிட்ட பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டிற்குள் ஏகப்பட்ட சண்டைகள், வாக்குவாதம் போன்றவை நடந்து வருகிறது. இவ்வாறு சுவாரஸ்யமாக நகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு டாஸ்குளும் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்

முத்துக்குமரன், 1956-ல் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பத்மினியிடம் கூறும் நான்கு நிமிட வசனத்தை மிகவும் அற்புதமாக பேசி நடித்திருக்கிறார். இந்த வசனமானது கலைஞர் கருணாநிதியால் எழுதப்பட்டது.

‘சோழன் மகளை சேரன் மனம் தான். அந்த சேரனுக்கோர் செல்வன் பிறந்தான். செல்வன் இந்த சிலையை மணந்தான்’ என்று தொடங்கும் அந்த வசனத்தை “காவிரி தந்த தமிழகத்துக்கு புது மணலில் களம் அமைத்து சேர, சோழ, பாண்டி மன்னர் கோபுரத்து கலமதில் யார் கொடிதான் பறப்பதென்று இன்று போல் போர் தொடுத்து கொண்டிருந்த காலம் அது. அந்நாளில் போர்க்களத்தில் தாய்நாடு காக்க தாவி பாய்ந்து சித்தார் தந்தை என்று செய்தி கேட்டு அனல்வில் மெழுகானால் தமிழகத்துக்கு கிளியோருத்தி” என்று மிக நீளமான வசனத்தை மிகவும் அற்புதமாக நடித்துக் காட்டியிருந்தார் போட்டியாளர் முத்துக்குமரன். இது ரசிகர்களை வெகுவாக கவர்த்து இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ