Homeசெய்திகள்சினிமாபிக் பாஸ் பூர்ணிமா ரவி நடித்துள்ள 'செவப்பி'... ரிலீஸ் எப்போது தெரியுமா?

பிக் பாஸ் பூர்ணிமா ரவி நடித்துள்ள ‘செவப்பி’… ரிலீஸ் எப்போது தெரியுமா?

-

பிக் பாஸ் பூர்ணிமா ரவி நடித்துள்ள செவப்பி... ரிலீஸ் எப்போது தெரியுமா?யூட்யூபில் தொடர்ச்சியாக வீடியோக்கள் பதிவிடுவதன் மூலம் பிரபலமானவர தான் பூர்ணிமா ரவி. அதைத்தொடர்ந்து இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கு என தனி ஒரு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சேகரித்துள்ளார். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் நடனம் ஆடுவது, நடிப்பு போன்ற திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார் இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக செவப்பி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் பூர்ணிமா ரவி. இந்த படத்தில் ஐந்து வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்துள்ளார் பூர்ணிமா ரவி. பிக் பாஸ் பூர்ணிமா ரவி நடித்துள்ள 'செவப்பி'... ரிலீஸ் எப்போது தெரியுமா?ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் குமரன் எனும் ஐந்து வயது சிறுவன் கோழி ஒன்றை மிகுந்த பாசத்தோடு வளர்க்கின்றான். ஒரு கட்டத்தில் அந்த கோழியும் அந்த சிறுவனும் பிரிய நேரிடுக்கிறது. இறுதியில் கோழியும் சிறுவனும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதையாகும். எம் எஸ் ராஜா இந்த செவப்பி படத்தை எழுதி இயக்கியுள்ளார். ராஜேஸ்வர் காளிசாமி மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் பூர்ணிமா ரவியுடன் இணைந்து ரிஷிகாந்த், தில்லி, ஆண்டனி, செபாஸ்டியன், ராஜாமணி பாட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் பீல் குட் படமாக உருவாகியுள்ள இந்த படம் 2024 ஜனவரி 12ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

MUST READ