விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதன் முதல் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில் தற்போது 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அதன்படி இந்த சீசன் தற்போது நான்காவது வாரத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு டாஸ்காக கொடுத்து வரும் பிக்பாஸ் இந்த வாரம் டமால் டுமீல் பட்டாசு யார்? நமத்து போன பட்டாசு யார்? என்பதை சொல்வது போன்ற டாஸ்கை கொடுத்திருக்கிறார். இதற்கான ப்ரோமோவும் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் முத்துக்குமரன் அந்த டாஸ்கை வாசிக்க முதலில் ஜாக்குலின் வந்தார். சுனிதா தான் இந்த வீட்டில் டமால் டுமீல் பட்டாசாக இருக்கிறார் என்று சொல்ல அடுத்தது ஜெஃப்ரி, நடிகர் ரஞ்சித்தை நமத்து போன பட்டாசு என சொன்னார்.
#Day26 | #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 Streaming24x7 on #Disneyplushotstartamil#BB8Streaming24x7 #VJStheBBhost #VijaySethupathi 😍 #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil pic.twitter.com/gYTqKBRQoW
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) November 1, 2024
அதற்கு ரஞ்சித், நமத்துப்போன பட்டாசு என்று நினைத்தால் திடீரென அது வெடித்து முகமே கருகிவிடும் என்று சொன்னார். மேலும் சௌந்தர்யா வந்து சத்யா தான் நமத்துப்போன பட்டாசு என சொல்ல சத்யாவும், அருணும் சௌந்தர்யாவை நமத்து போன பட்டாசு என கூறினர். இவ்வாறு பிக் பாஸ் கொளுத்தி போட்ட டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் வன்மங்களை தீர்த்து வருகின்றனர். இவ்வாறு இன்றைய எபிசோட் சுவாரஸ்யமாக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.