Homeசெய்திகள்சினிமாவேண்டுமென்றே அவதூறு பரப்பியுள்ளார்கள்.... சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் விக்ரமனின் மனைவி!

வேண்டுமென்றே அவதூறு பரப்பியுள்ளார்கள்…. சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் விக்ரமனின் மனைவி!

-

- Advertisement -

பிக் பாஸ் விக்ரமனின் மனைவி வேண்டும் என்று அவதூறு பரப்பி உள்ளார்கள் என பேட்டி அளித்துள்ளார்.கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..... சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் விக்ரமன் வெளியிட்ட பதிவு!பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விக்ரமன். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள இருக்கும்போது அறம் வெல்லும் என்ற இவருடைய வாசகம் மிகவும் வைரலானது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் டைட்டிலை தட்டி தூக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இவருக்கு நிஜ வாழ்க்கையிலும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.வேண்டுமென்றே அவதூறு பரப்பியுள்ளார்கள்.... சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் விக்ரமனின் மனைவி!

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம், இவர் ஏற்கனவே சர்ச்சை ஒன்றில் சிக்கி இருந்தார். அதன்படி பெண் ஒருவர் வெளிநாட்டில் இருந்து விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறி புகார் கொடுத்திருந்தார். இதன் அடிப்படையில் விக்ரமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் விக்ரமன். அதன்படி பெண் வேடமிட்டு ஆண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. வேண்டுமென்றே அவதூறு பரப்பியுள்ளார்கள்.... சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் விக்ரமனின் மனைவி!எனவே இந்த வீடியோவை பார்த்த பலரும் விக்ரமனை விமர்சித்து வருகின்றனர். ஆனால் விக்ரமன் இது தொடர்பாக விளக்கம் கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில், “சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக நடந்த வீடியோவை வைத்து அடிப்படை ஆதாரம் இன்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதை தொடர்ந்து விக்ரமனின் மனைவி, இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்து இருப்பதாக கூறியுள்ளார். அத்துடன் “படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்ட வீடியோ அது. வேண்டுமென்றே அவதூறு பரப்பி உள்ளார்கள். போலீசாரிடம் அவர்களைக் கண்டுபிடிக்க சொல்லியிருக்கிறோம். அவர்கள் யார் என்பதை எனக்கு தெரியும். அவர்கள் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் அவர்களைப் பற்றி நான் இப்போது சொல்ல விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ