Homeசெய்திகள்சினிமாபிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'ராயன்'..... தனுஷுக்கு பரிசு வழங்கிய கலாநிதி மாறன்!

பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘ராயன்’….. தனுஷுக்கு பரிசு வழங்கிய கலாநிதி மாறன்!

-

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி ராயன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தனுஷ் தானே இயக்கி நடித்திருந்தார்.பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'ராயன்'..... தனுஷுக்கு பரிசு வழங்கிய கலாநிதி மாறன்! இப்படம் தனுஷின் ஐம்பதாவது படமாகும். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்திருந்தார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் ஆகியோர் தனுஷுக்கு தம்பிகளாக நடித்திருந்தனர். துஷாரா விஜயன் தனுஷுக்கு தங்கையாக நடித்திருந்தார். மேலும் படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க செல்வராகவன், பிரகாஷ்ராஜ், அபர்ணா பால முரளி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் சுமார் 150 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நாளை (ஆகஸ்ட் 23) அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் வெளியாக இருக்கிறது ராயன்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதிமாறன் ராயன் படத்திற்கு கிடைத்த வெற்றிக்காக நடிகர் தனுஷுக்கு பரிசு வழங்கியுள்ளார். அதன்படி கலாநிதி மாறன், படத்தில் நடித்ததற்காகவும் படத்தை இயக்கியதற்காகவும் தனுஷிடம் 2 காசோலைகளை வழங்கும் புகைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

MUST READ