Homeசெய்திகள்சினிமாபிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சூரியின் 'கருடன்'..... மூன்று ஓடிடி தளங்களில் நாளை வெளியீடு!

பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சூரியின் ‘கருடன்’….. மூன்று ஓடிடி தளங்களில் நாளை வெளியீடு!

-

சூரியின் கருடன் திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாக இருக்கிறது.பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சூரியின் 'கருடன்'..... மூன்று ஓடிடி தளங்களில் நாளை வெளியீடு!

நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். இதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவே நடித்து வருகிறார் சூரி. அந்த வகையில் கொட்டுக்காளி, விடுதலை 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள சூரி, இயக்குனர் ராம் இயக்கியுள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் சூரி. இதில் சூரி தவிர சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி ஆகியோரும் நடித்திருந்தனர். கிராமத்துக் கதைக்களத்தில் வெளியான இந்த படத்தில் சூரி ஆக்சன் ஹீரோவாக நடித்திருந்தார். பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சூரியின் 'கருடன்'..... மூன்று ஓடிடி தளங்களில் நாளை வெளியீடு!இப்படமானது கடந்த மே 31 அன்று திரையிடப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கருடன் திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த படம் நாளை (ஜூலை 3) அமேசான் பிரைம், டென்ட் கொட்டா, சிம்பிளி சௌத் ஆகிய மூன்று ஓடிடி தளங்களில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ