கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற பையா திரைப்படம் மீண்டும் ரி ரிலீஸ் ஆவதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கில் படங்கள் வெளியானாலும், அதில் ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி மாபெரும் ஹிட் அடிக்கின்றன. அந்த வகையில் 2010-ம் ஆண்டு வெளியான பையா திரைப்படமும் ஒன்று. கார்த்தி மற்றும் தமன்னா ஆகியோர் முதன்மை வேடத்தில் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை பெரிதும் கை கொடுத்தது. இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அந்த சமயத்தில் சூப்பர் ஹிட் அடித்தன. படம் முழுவதும் காரில் பயணிக்கும் பயணத்தில் கதையோடு சேர்ந்து ரசிகர்களும் பயணித்தனர்.
இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் லிங்குசாமி பையா படத்தை தொடர்ந்து அஞ்சான், சண்டக்கோழி 2, தி வாரியர் உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து, பையா 2-ம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் லிங்குசாமி ஈடுபட்டுள்ளார். தற்போது கார்த்தி அவரது 26 மற்றும் 27-வது திரைப்படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார். அதனால், தற்போது பையா 2 படத்தை மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாக உள்ளது.
Happy to share that our Blockbuster #Paiyaa will be re-released all over tamilnadu soon. pic.twitter.com/WWGiOGLjIc
— Thirrupathi Brothers (@ThirrupathiBros) December 27, 2023