சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று (அக்டோபர் 10) உலகம் முழுவதும் வெளியாகும் திரைப்படம் தான் வேட்டையன். டிஜே ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் இந்த படத்தை காண ரசிகர்கள் பலரும் திரையரங்குகளுக்கு திரண்டு வருகின்றனர். மேலும் ட்விட்டரில் தங்களின் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் சமூக வலைதள பக்கத்தில் வேட்டையன் படம் குறித்து வெளியிட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஏற்கனவே ப்ளூ சட்டை மாறன், தனது யூட்யூப் சேனலில் எவ்வளவு பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும் வெளுத்து வாங்கி விடுவார். அதுபோல ரஜினியையும் விமர்சித்து வருவார். கடந்தாண்டு வெளியான ஜெயிலர் படம் ரிலீஸின் போது கூட ரஜினி ரசிகர்களுக்கும், ப்ளூ சட்டை மாறனுக்கும் இடையில் விவாதம் நடந்தது. வெட்டு குத்து என்றெல்லாம் கூட பேசி இருந்தார்கள் ரஜினி ரசிகர்கள். இருப்பினும் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ரஜினியை விமர்சித்து வந்தார்.
இன்று முதல்.. தலைவரின் ஆட்டம் ஆரம்பம். pic.twitter.com/dfqWvOWEPn
— Blue Sattai Maran (@tamiltalkies) October 10, 2024
ஆனால் இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வேட்டையன் படத்தின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அதில் “இன்று முதல் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.