- Advertisement -
அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிப்பில் உருவாகியிருக்கும் ப்ளூ ஸ்டார் திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு வீடியோக்களை படக்குழு மகிழ்ச்சியாக பகிர்ந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு. சினிமா பின்புலம் இன்றி திரைக்கு வந்த அசோக் செல்வன் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். மாறுபட்ட கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். அசோக் செல்வன் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சபா நாயகன். அதேபோல, சாந்தனு நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ராவண கோட்டம். இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், சாந்தனு மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகிய திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தில் பிருத்வி ராஜன் கீர்த்தி பாண்டியன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். ஜெயக்குமார் இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார். நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பா ரஞ்சித் தயாரித்து உள்ளார். இத்திரைப்படம் கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
ஆழ்ந்த சிந்தனையில் சாம் 😅💙🌟#BlueStarRunningSuccessfully @prithviactor @AshokSelvan @officialneelam @lemonleafcreat1 @SakthiFilmFctry @BlueStarOffl pic.twitter.com/xwENqbWw3u
— Shanthnu (@imKBRshanthnu) February 3, 2024