Homeசெய்திகள்சினிமாகங்குவா கிளிம்ப்ஸ் ரெடி... மகனுடன் கண்டு ரசித்த வில்லன் நடிகர்...

கங்குவா கிளிம்ப்ஸ் ரெடி… மகனுடன் கண்டு ரசித்த வில்லன் நடிகர்…

-

கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை, நடிகர் பாபி தியோல் தனது மகனுடன் கண்டு ரசித்துள்ளார்.

நடிப்பில் மூலம் சினிமாவில் உயரத்திற்கு சென்ற பெருமை நடிகர் சூர்யாவைச்  சேரும். சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் தான் கங்குவா. இப்படத்தை பிரபல கமர்ஷியல் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். சூர்யாவின் திரை வாழ்வில் மாபெரும் பட்ஜெட்டில் வரலாற்று கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகிறது. படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கிறார். பிரபல இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது.

இதைத் தொடர்ந்து படத்தின் டப்பிங் பணிகளும் அடுத்தடுத்து தொடங்கி நடைபெற்று வந்தன. இந்நிலையில், படத்தில் வில்லனாக நடித்திருந்த பாபி தியோல் தனது மகனுடன் அமர்ந்து கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோவை கண்டு ரசித்துள்ளார்.

MUST READ