Homeசெய்திகள்சினிமாபாபி சிம்ஹாவின் 'ரஸாக்கர்' பட டிரைலர் வெளியீடு!

பாபி சிம்ஹாவின் ‘ரஸாக்கர்’ பட டிரைலர் வெளியீடு!

-

பாபி சிம்ஹாவின் ரசாக்கர் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

பாபி சிம்ஹாவின் 'ரஸாக்கர்' பட டிரைலர் வெளியீடு!நடிகர் பாபி சிம்ஹா,  தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருபவர். இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, சூது கவ்வும், நேரம் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்தார். அதைத் தொடர்ந்து ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து பெயர் பெற்றார். மேலும் இறைவி, கோ 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பாபி சிம்ஹா. இந்நிலையில் பாபி சிம்ஹா நடிப்பில் ரஸாக்கர் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பாபி சிம்ஹாவுடன் இணைந்து வேதிகா, ராஜ் அருண், அனுசியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்
நடித்துள்ளனர். யதா சத்யநாராயணா இயக்கியுள்ள இந்த படத்தை சமீர் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரமேஷ் குசேந்திரன் இதற்கு ஒளிப்பதிவு செய்ய, பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சுதந்திரப் போராட்டம் நடந்த சமயத்தில் ஹைதராபாத் நகரில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ