Homeசெய்திகள்சினிமாபாலிவுட் நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி..... வருத்தத்தில் ரசிகர்கள்!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி….. வருத்தத்தில் ரசிகர்கள்!

-

நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி..... வருத்தத்தில் ரசிகர்கள்!

நடிகர் ஷாருக்கான் பாலிவுட்டில் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக வலம் வருபவர். அந்த வகையில் இவர் நடித்திருந்த பதான், ஜவான், டங்கி போன்ற படங்கள் அதிக வசூலை வாரிக் குவித்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு நடிகர் ஷாருகான் கமிட்டாகியுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

மேலும் நடிகர் ஷாருக்கான் தயாரிப்பாளராகவும் வலம் வரும் நிலையில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைட்ஸ் அணியின் உரிமையாளரும் ஆவார். அதன்படி நேற்றைய முன் தினம் கொல்கத்தா அணிக்கும் ஐதராபாத் அணிக்கும் இடையே குவாலிஃபயர் 1 சுற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதனை நேரில் சென்று கண்டுகளித்தார் ஷாருக்கான். இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி..... வருத்தத்தில் ரசிகர்கள்!அதாவது வெப்ப அலைகள் காரணமாக நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகளால் நடிகர் ஷாருக்கான் தற்போது அகமதாபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அறிந்த ஷாருக்கான் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். மேலும் ஷாருக்கானின் உடல்நலம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.

MUST READ